WELCOME TO MY PAGE GUYS .....

BY U R FRIEND JasVen .....

Saturday, 30 November 2013

வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசியத்தைவும்  
திரும்பி பார்த்து கொண்டே இருக்க முடியாது,
ஆனால் எதாவது ஒரு விஷயம் நம் வாழ்கையை முழுவதும்,
 திரும்பி பார்க்க வைத்து விடும்..

என்னை நேசி...

உலகில் உள்ள எல்லோரும் என்னிடம் காட்டும் அன்புக்கும்
உன்னையே உலகமாய் நேசிக்கும் எனக்கும்
ஒரு சிறு வித்தியாசம் கூட புரிந்து கொள்ளாத
உன்னை புரிந்து கொண்ட என்க்கு இந்த
வலி தேவைதான்,,,,

Friday, 29 November 2013

ஆண்-பெண் நட்பு....

தயக்கத்தோடு 
ஆரம்பிக்கும் 
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.

முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை,
என் தோழியை/நண்பனை
விட வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு.

பலவீனம்

அன்பு்தான் என் பலவீனம்

அன்பால் கற்றது காயங்களை மட்டுமே

இனியும் காயம் வேண்டாம்

காயத்திற்கு பதிலாக

காலனே என்

உயிரை எடுத்து விடு

என் கண்ணீராவது

மிச்சப்படட்டும் !!

Thursday, 14 March 2013

என் தோழியாய் வரபோகும் மனைவியே

♥♥♥என் தோழியாய் வரபோகும் மனைவியே.........
என் நெஞ்சுக்குள் சின்னச்சின்னதாய் சில
ஆசை உண்டு.........
இது கவிதை அல்ல என் மனதில் புதைத்து வைத்திருந்த
ஆசைகளின் வெளிப்பாடு..........
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்க ஆசை.............
உன் சுட்டு விரல் பிடித்து
உன் பாதம் தொடர ஆசை..............
உன் கால் நகம் வெட்டிவிட
கையில் மருதாணி வைத்துவிட ஆசை............
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி நீ வாசிக்க
நான் கேட்க ஆசை..........
உன் கைக்குட்டை திருடி அதை என் கையில்
எபோதும் வைத்திருக்க ஆசை........
உனக்காக காத்திருக்க ஆசை...............
காலதாமதமாய் வரும் நீ என் மன்னிப்புக்கு
சினுங்கும் ஆசை..............
சின்ன சின்ன தவறுகள் நான் செய்யும் போது
நீ திட்ட ஆசை............
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும்
கேட்க ஆசை..........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும்
சண்டைகள் ஆசை...........
அந்தச் சண்டையின் போது உன் முகத்தின் கோபம் பார்க்க ஆசை..........
சண்டைக்கு பின் யாருக்கும் தெரியாமல் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ஆசை.............
என் விரல் கொண்டு மல்லிகை பூ சூட ஆசை.........
உன் விழி சொல்லும் கவிதை வாசித்து
பார்க்க ஆசை............
நம் சொந்தங்கள் அனைவரும் சேர்ந்து கோவிலில்
பொங்கல் வைக்க ஆசை...........
எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கையில் தூரமாக நிற்கும் என்னை உன் கண்கள் தேட ஆசை...........
கூட்டத்தில் நீ நிற்கும் போது யாருக்கும் யாருக்கும் தெரியாமல் உன் இடுப்பில் கிள்ளிவிட நீ
கத்தும் ஆசை..........
அப்போ அப்போ செல்ல பெயர் வைத்து
கூப்பிட ஆசை...........
உன்னையும் என்னையும் பார்த்து ஊர் மக்கள் இப்டி ஒரு புருஷன் பொண்டாட்டியா என்று சொல்ல ஆசை............
ஒற்றை அடி பாதையில் உன் பாத சுவடு மீது
என் பாதம் தொடர ஆசை..........
உன்னை என் பின்னால் உட்கார வைத்து ஒரு
மிதிவண்டி பயணம் போக ஆசை...........
நீ சாப்பிடும் போது எனக்கும் ஊட்டிவிட ஆசை.............
நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை.............
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில்
உன்னோடு நிலா சோறு உன்ன ஆசை...........
சின்னஞ்சிறு கதைகள் பேசி கொஞ்சி மகிழ ஆசை..........
உன் உடல் நிலை சரியில்லாத போது உன்
தலைகோத ஆசை...........
என்கருவை சுமக்கும் உன்னை ஒரு குழந்தை போல்
பார்த்துக்கொள்ள ஆசை..........
அப்ரம் என் குட்டி பாப்பாவோட விளையாட ஆசை............
வாழ்கின்ற காலம்மெல்லாம் நீ எனக்காகவும் நான் உனக்காகவும் உண்மையாக வாழ்ந்திட ஆசை..........
இப்படியெல்லாம் வாழ்கின்ற போது என்னை மட்டும் தனியா விட்டுட்டு போய்டாத நீ இல்லாம நா மட்டும் எப்டி வாழ்வேன்
என்னாலயெல்லாம் இருக்க முடியாது. நீ போன
அடுத்த நிமிஷம்
நா உன்னோடு வந்துருவேன் அம்மு......................

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...

10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை...!

Monday, 21 January 2013

naan rasithavai-02

அன்பு 

பிரிந்து இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!
நீ அருகில் இருந்து சண்டை போடு
அது போதும்!!!...

naan rasithavai-01

நீயே எனக்கு முதல் 

முதலில் பெற்ற அன்பும் உன்னிடம்
முதலில் சென்ற பயணமும் உன்னிடம்
முதலில் கண்ட அழகான கனவும் உன்னால
முதலில் அடைந்த இன்பமும் உன்னால
முதலும் இறுதியாகவும் நீயே இருக்க
ஆசைகொண்டு வாழ்க்கையே ஓட்டுகிறேன்

THANK U FOR VISITING MY PAGE BY VENKATESH