♥♥♥என் தோழியாய் வரபோகும் மனைவியே.........
என் நெஞ்சுக்குள் சின்னச்சின்னதாய் சில
ஆசை உண்டு.........
இது கவிதை அல்ல என் மனதில் புதைத்து வைத்திருந்த
ஆசைகளின் வெளிப்பாடு..........
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்க ஆசை.............
உன் சுட்டு விரல் பிடித்து
உன் பாதம் தொடர ஆசை..............
உன் கால் நகம் வெட்டிவிட
கையில் மருதாணி வைத்துவிட ஆசை............
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி நீ வாசிக்க
நான் கேட்க ஆசை..........
உன் கைக்குட்டை திருடி அதை என் கையில்
எபோதும் வைத்திருக்க ஆசை........
உனக்காக காத்திருக்க ஆசை...............
காலதாமதமாய் வரும் நீ என் மன்னிப்புக்கு
சினுங்கும் ஆசை..............
சின்ன சின்ன தவறுகள் நான் செய்யும் போது
நீ திட்ட ஆசை............
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும்
கேட்க ஆசை..........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும்
சண்டைகள் ஆசை...........
அந்தச் சண்டையின் போது உன் முகத்தின் கோபம் பார்க்க ஆசை..........
சண்டைக்கு பின் யாருக்கும் தெரியாமல் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ஆசை.............
என் விரல் கொண்டு மல்லிகை பூ சூட ஆசை.........
உன் விழி சொல்லும் கவிதை வாசித்து
பார்க்க ஆசை............
நம் சொந்தங்கள் அனைவரும் சேர்ந்து கோவிலில்
பொங்கல் வைக்க ஆசை...........
எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கையில் தூரமாக நிற்கும் என்னை உன் கண்கள் தேட ஆசை...........
கூட்டத்தில் நீ நிற்கும் போது யாருக்கும் யாருக்கும் தெரியாமல் உன் இடுப்பில் கிள்ளிவிட நீ
கத்தும் ஆசை..........
அப்போ அப்போ செல்ல பெயர் வைத்து
கூப்பிட ஆசை...........
உன்னையும் என்னையும் பார்த்து ஊர் மக்கள் இப்டி ஒரு புருஷன் பொண்டாட்டியா என்று சொல்ல ஆசை............
ஒற்றை அடி பாதையில் உன் பாத சுவடு மீது
என் பாதம் தொடர ஆசை..........
உன்னை என் பின்னால் உட்கார வைத்து ஒரு
மிதிவண்டி பயணம் போக ஆசை...........
நீ சாப்பிடும் போது எனக்கும் ஊட்டிவிட ஆசை.............
நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை.............
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில்
உன்னோடு நிலா சோறு உன்ன ஆசை...........
சின்னஞ்சிறு கதைகள் பேசி கொஞ்சி மகிழ ஆசை..........
உன் உடல் நிலை சரியில்லாத போது உன்
தலைகோத ஆசை...........
என்கருவை சுமக்கும் உன்னை ஒரு குழந்தை போல்
பார்த்துக்கொள்ள ஆசை..........
அப்ரம் என் குட்டி பாப்பாவோட விளையாட ஆசை............
வாழ்கின்ற காலம்மெல்லாம் நீ எனக்காகவும் நான் உனக்காகவும் உண்மையாக வாழ்ந்திட ஆசை..........
இப்படியெல்லாம் வாழ்கின்ற போது என்னை மட்டும் தனியா விட்டுட்டு போய்டாத நீ இல்லாம நா மட்டும் எப்டி வாழ்வேன்
என்னாலயெல்லாம் இருக்க முடியாது. நீ போன
அடுத்த நிமிஷம்
நா உன்னோடு வந்துருவேன் அம்மு......................
No comments:
Post a Comment