WELCOME TO MY PAGE GUYS .....

BY U R FRIEND JasVen .....

Wednesday, 26 September 2012

என் நட்பின் இலக்கணம்.....

எப்போது பிரிந்து விடுஒம் என்று பயந்து
பயந்து இன்று ஒருவரை ஒருவர் பிரிந்து
வாழும் நிலை எங்களுக்கு இன்று வந்துள்ளது...
எல்லோரிடமும் நான் சொல்லும் போது நாங்கள்
எப்போதும் பிரிய மாட்டோம் என்று சொல்லி பழகிய
எனக்கு  இப்போது அனைவரிடமும் இருந்து மறைந்து
செல்ல வேண்டிய நிலை வந்துள்ளது.........

Tuesday, 18 September 2012


என்னை மன்னித்து விடு என் உயிரே.....

இன்று  எனக்காக அவள் அழுத போது
தான் எனக்கு நினைஉகள் வந்தது
அவளுக்காக நான் அழுத நாட்கள்...
என் மனம் இன்னமும் அவள் அழுததை
மறக்கவில்லை..
நான் அவள் அழ வேண்டும் என்பதற்காக
இப்படி செயல்படவில்லை...
நான் மீண்டும் அழ கூடாது, அவளும்
இனிமேல் எனக்காக அழ கூடாது என்பதற்கு
தான்...
     என்னை மன்னித்து விடு என் உயிரே.....

Monday, 17 September 2012

FOR WHO REALLY KNOW THE VALUE OF FRIENDSHIP..


விடியலை தேடும் நட்பு
ஒரு ஆணும் பெண்ணும் எப்படி நட்புடன் பழக முடியும்? என்று எண்ணும் அனைவரும் இந்த சிறுகதையை கட்டாயம் படிக்க வேண்டும். இச்சிறுகதை நான்கு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டது. வீரத், குமார், ஜோதி, தமிழ் ஆகிய நான்கு இருபது வயது இளைநர்களை அடிப்படையாக கொண்டது. இதில் ஜோதியும் தமிழும் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். மற்ற இருவரும் ஜோதி உடன் கல்லூரியில் படிப்பவர்கள் இவர்கள் மூவரின் நட்பும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் வளர தொடங்கியது. ஜோதியை மணம் செய்ய உள்ள தமிழுக்கும் இவர்களின் நட்பின் தரம் நன்கு புரிந்து கொண்டவன்.
இவர்கள் அனைவரின் பெற்றோர்க ---ளுக்கும் இவர்களை பற்றி நல்ல எண்ணங்கள் வளர தொடங்கியது. இந்த நிலையில் ஒரு வேலையின் காரணமாக தமிழ் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று நேரம் கிடைக்கும் போது வந்து ஜோதியை பார்த்து சென்று கொண்டு இருக்க பல நாட்கள் தமிழால் ஜோதியை பார்க்க முடிய –வில்லை. இதை தொடர்ந்து ஜோதி, குமார், வீரத் ஆகிய மூன்று பேருக்கும் தமிழின் சொந்த ஊரில்தான் நுழையுட் தேர்வு எழுத வேண்டிய நேரம் வந்தது/
இவர்கள் மூவரும், சரி தேர்வை முடித்து விட்டு அப்படியே தமிழையும் பார்த்து விட்டு வீடு திரும்பலாம் என்று முடிவு செய்து தங்களின் பெற்றோர்களின் சம்மதம் வாங்கினர்.
தேர்வு நாள் அன்று தேர்வை நல்ல முறையில் எழுதிய மூவரும் வாழ்வில் எப்போதும் ஒன்றாக நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த தமிழ் இவர்களின் நட்பை உயர்வாய் என்ன ஆரம்பித்தான். பின்பு காதல் வாசம் புரிந்த ஜோதியும் தமிழும் காதல் பிரிவை மீண்டும் ஏற்க இப்போது பிரிய வேண்டும் என்று எண்ண துவங்கினர். ஒருவரின் அன்பில் ஒருவர் பரிமாறி கொண்டே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர்.
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து பயணத்தை துவங்கியது. அவர்களும் தங்களின் அன்பு பிரிவு பயணத்தை துவங்கினர். கடும் அலைச்சல் மற்றும் தூக்கம் இன்மையால் உடல் நலம் பாதிக்க தொடங்கிய ஜோதி பேருந்தில் தன் நண்பர்கள் மீது தலையை சாய்ந்தபடி தூங்கி கொண்டு இருந்தாள். வீடு திரும்ப அறை மணி நேரம் இருந்த நிலையில் ஒரு சிறிய கிராம பேருந்து நிறுத்தம் ஒன்றில் ஒரு மது அருந்திய குடிமகன் பேருந்தில் ஏறினான். பேருந்தின் நடத்துனர் அவனிடம் கட்டணம் வசூல் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த நிலை இல்லாத மனிதன் நடத்துனரிடம் இந்த மாதிரி பெண்ணும் பையன்களும் ஒரே இருக்கையில் வருகின்றனர். இவர்களை போன்ற இளைநர்களை நாம் எப்படி நம்ப முடியும் இந்த வயதிலே இப்படி ஊரை சுற்றி கொண்டு இருக்கிறாள் இரு இளைநர்கலுடன் என்று சொல்லி விட்டு இவர்களை பெற்ற பெற்றோர் இவர்களை பணம் செலவு செய்து படிக்க வைத்தல் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று அளவுக்கு அதிகமாக பேசிக்கொண்டு இருந்தார். தங்களை பற்றி பேசியதை விட தங்களின் நட்பை பற்றி அவமானப்படுத்தி பேசியதை பொறுக்க முடியாமல் வீரத் எழுந்து நீங்கள் வயதில் மூத்தவர் எங்களின் தந்தை போல் உள்ளதால் இவ்ளோ நேரம் பொருத்துக்கொண்டோம்.
இதற்கு மேல் எங்களை பற்றிய உங்களின் தவறான எண்ணத்தை கை விடுங்கள் என்று மனம் வருந்தி அந்த மனிதனிடம் கூறினான். இருந்தாலும் வீரத் மற்றும் குமார் இருவரும் மனம் வருந்தி கொண்டு இருந்தனர். இவர்களை பார்த்த ஜோதி அவர்களை மனம் வருத்த படாமல் இருக்க,
அவர்களிடம் இந்த உலகம் ஒரு ஆணும். பெண்ணும் நல்ல நட்போடு பழகுவதை கூட அவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை அவர்களின் மகள் போல உள்ள என்னிடம் இப்படி பேசுகிறோம் என்று கூட தெரியாமல் குடி போதையில் இப்படி உளறி விட்டு சென்று உள்ளார். சரி இதுக்கு போய் ஏன்டா நீங்க ரெண்டு பேரும் இப்படி வருதபட்டுட்டு இருக்கீங்க நம்ம மூணு பேறு மனசும் எப்படி பழகுதுன்னு அவர்களுக்கு என்ன தேறிய போகுது நாம என்னைக்கும் நல்ல நண்பர்களா தான் இருப்போம் இந்த ஒருவர் மட்டும் குடித்து விட்டு கண்மூடி தனம பேசல நாட்ல ரொம்ப குடிகரான்க இப்படி தான் இருக்காங்க, நம்ம போன்ற நல்ல நபர்கள் யாரும் இது வரைக்கும் நல்ல மனசோட இருந்ததிள்ள எல்லாரும் செய்யற தப்ப நாமும் செய்ய போறோம்னு அவங்க எல்லாம் நினைச்சாலும் நம்ம நட்ப பாத்து வருங்காலம் நம்மள பாராட்ட போகுது அப்படின்னு அவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜோதி பேசிட்டு இருந்தாள். இவர்களின் பேச்சை கேட்ட முன் புற இருக்கையில் இருந்த எழுபது வயதுமிக்க ஒரு பாட்டி அவர்கள் மூவர்க்கும் ஆறுதல் கூறினால். அது மட்டும் இல்லாமல் அந்த குடிகாரனை
நன்கு அனைவரின் முன்பும் திட்டினால் இது போல வேறு யாரிடமும் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறினாள். இதை கேட்ட அந்த குடிகாரன் அடுத்த நிறுத்தம் வந்ததும் இறங்கி விட்டான். அந்த மூன்று பேரின் இனிமையான பயணம், சற்று நேரம் கழித்து மீண்டும் சந்தோசமாக தொடங்கியது.
இக்கதையில் வந்த அந்த அருமையான ஆண் பெண் நட்பும் அவர்களை இழிவாக நினைத்த அந்த குடிகாரன் போன்ற சமுதாயமும், தான் நண்பர்களுக்கு ஆறுதல் கூறிய அந்த ஜோதி போன்ற உண்மையான வீரம் உள்ள பெண்களும், அந்த பாட்டியை போன்ற தட்டி கேக்கும் நல்ல உள்ளங்களும் இந்த பூமில் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்.
இந்த சமுதாயம் இது போன்ற உண்மையான ஆண் பெண் நட்பை புரிந்து கொண்டு இது போன்ற நல்ல நட்பை அவர்களை ஏற்று கொள்ளும் விடியலை தேடி கொண்டு தான் இருக்கிறது இது போன்ற உண்மையான நட்புகள் இன்னமும் இந்த பூமியில்.
---------நிறைவு
இக்கதை என்னுடைய சொந்த முயற்சி மற்றும் கற்பனையில் உருவானது என்றும் இது போன்ற மாற்றங்கள் சமுதாயத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலும் உருவானது என்பதை கூறி உறுதி அளிக்கிறேன்.
----- சி. வெங்கடேஷ்




































Sunday, 16 September 2012


உண்மையான உரிமை.....






உண்மையான அன்புக்கு கூட குறிப்பிட்ட காலம் வரை தான்
உணர்வோடும் உரிமையோடும்   பேசும் உரிமை உண்டு ...

என் தோழி...

உன்னை நினைத்த போது
எனக்கு தெரியவில்லை உன்னை
மறக்க முடியாது என்று
உன்னை மறக்க நினைத்த போது
தான் நான் அறிந்தேன்
உன்னை இன்னும் நினைத்து வாழ
வேண்டும் என்று.....


அழகு ...

உன்னை நினைக்க கூட
பலருக்கு தகுதி இல்லை
ஆனால் நினைத்து கொள்கிறோம்
உன்னை எங்களில் உள்ளவனாய்
எங்கள் காதலராக உணர செய்கிறாய்

பெண்ணே...

பெண்ணே உன்னை
நான் மறக்க நினைக்கும் போது எல்லாம்
என் மரணம் தான் என்
கண் முன் வந்து
செல்கிறது , ஏன்
நீ என் உயிரோ?

தனிமை .....


என்னை எனக்கே பிடிப்பதில்லை
என் மனதில் எற்படும்
ஒரு வித இனம் புரியாத வெறுப்பு ..
பல சமயங்களில்
உன்னை நான் என்னுள்
உணர்கிறேன் தனிமையாய்..

தாய்மை ....

என் தேகம் துடிக்கிறது
என்னில் இருந்து உருவான
உயிர் உணவு பசியால் அழுந்தபோது
என்னையும் மீறி என்
மார்புகள் பாலை
சுரந்தன...

தூக்கமே !

தூக்கமே நீ என்ன பெண்ணா
உன்னை நினைக்கும் போது
ஒரு வித மயக்கம்
ஹனால் ஏனோ தெரியவில்லை
நம் காதலை விழிப்பு
பிரித்துவிடுகிறது .. 

வரலாறு...

ஏனோ தெரியவில்லை
வரலாறுகளை திரும்பிபார்க்கும் போது
அதில் என் குறிப்பு இடம்பெறவில்லை
ஆராய்ந்த பின் தான்
தெரிந்தது வரலாறு கூறும்
அளஉக்கு நான் ஏதும்
செய்யவில்லை என்று!

கற்பனை......

என்னில் இருந்தபடியே
பறக்கிறாய் எங்கும்
சில சமயத்தில் என் அனுமதி
இல்லாமல் ஆனால் உனக்கும்
என் மனதுக்கும் என்ன
 ஒற்றுமையோ தெரியவில்லை
இருவரும் இணைந்தே
இருக்கிறீர் என் உயிரில்


காற்றே....


நீ இருக்கிறாய் என்பதை
பிறருக்கு உணர்த்த முடியவில்லை
உன் உருவ மறைவினால்....
ஆனால் அதை உணர்கிறேன்
உன்னை சுவாசிக்க முடியாமல்
இறப்பவைகளை எண்ணி !
    அவர்களின் மறைவினால்.......

சிற்பி.......



என்னை செதுக்கி உருவம்
செய்தாயோ பிறர் புகழ,
உன் மனதில் தோன்றிய
கற்பனை தோற்றத்தில்
வாழ்கிறேன் நான் உன்
புகழ் பாட நிஜத்தில்..

தாயே......


ரத்தம் சிந்தியபடியே
என்னை பெற்றாய் என்னை
இம்மண்ணில் வாழ !
இறுதியில் என் மரணத்திலும்
உன்னை கண்ணீர் சிந்த
வைத்தேனே இம்மண்ணில் வீழ !
என்னை மன்னித்து விடு......


சாதனை.....

சோதனை செய்ய நேரம்
இல்லாத பலர் செய்த
யோசனைகளால் உறுதியானது
பல சாதனைகள், நானும்
யோசிக்கிறேன் ஆனால் எனக்கு
கிடைத்தது அவர்களின் ‘யோசனையே’....!

என் தோழி.......

எப்போதும் எனக்கு புதிதாகவே தோன்றுகிராய்
நீண்ட நேரம் பேசிய பின்னரும் ஏதோ ஒன்று
இருக்கிறது இன்னும் உன்னிடம் பேச
உன்னை என் வாழ்வில் எப்படி மறப்பேன்
என் உயிர் நீ அல்லவா......


காதல், காதலிடம் வர வேண்டிய ஒன்று
நம் நட்புக்குள்ளும் வந்துள்ளது
என் காதலியை கூட மறப்பேன்
ஆனால் உன்னை போன்ற ஒரு அன்பான
ஒரு தோழியை எப்படி மறப்பேன்
என் வாழ்வின் விழி நீ அல்லவா


......என் தோழிக்காக

தாயின் பாசம்.....


உன் தலைமுடியை ரசித்த என் கூந்தல்,
உன் என் நெற்றியை இடித்து விளையாடிய என் நெற்றி,
உன் பால் வாசனையை சுவாசித்து வந்த என் மூக்கு,
உன் மழலை சொற்களை கேட்டு வாழ்ந்த என் காதுகள்,
உன்னை முத்தமிட்ட என் உதடுகள்,
உன்னை அரவணைத்த என் தோள்கள்,
உனக்கு பசியாற்றிய என் மார்புகள்,
உன்னை பத்து மாதம் சுமந்த என் வயிறு,
உன்னை பெற்றேடுத்த என் பிறப்பு உறுப்பு,
உன்னை சுமந்து நடந்த என் கால்கள்,
இவை அனைத்தும் இன்று
கருணை  இல்லத்தின் கட்டிலில்
அனாதையாய்........
இப்படி ஒரு பிள்ளையை பெற்ற எனக்கு
இந்த மரண தண்டனை தேவைதான்.........

முதுமை.....

என்ன தவம் செய்தேனோ?
முற்பிறவியில்,
குழந்தையாவே பிறந்தேன்
வாழ்க்கை என்னும்
போரில் போரிட்ட பின்
இறுதியில் முதுமையால்
குழந்தையாகவே மாறி
இறப்பை சந்திக்கிறேன்..........

சிற்பி......


என்னை செதுக்கி உருவம்
செய்தாயோ பிறர் புகழ,
உன் மனதில் தோன்றிய
கற்பனை தோற்றத்தில்
நான் வாழ்வது உன்
புகழ் பாட நிஜத்தில்......

THANK U FOR VISITING MY PAGE BY VENKATESH